புஷ்பா 2 படத்தில் ஒரு பாடலுக்கு நடன ஆடும் காஜல்..?
Nov 22, 2022, 15:28 IST

அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் புஷ்பா. அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா இப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்.
இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்திருந்தாலும். நடிகை சமந்தா இப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘ஊ சொல்றியா மாமா’ என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானார். இப்பாடல் சமந்தாவின் மார்கெட்டில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட மறுபடியும் சமந்தாவை அனுகிய போது மறுத்து விட்டார் சமந்தா.
இதையடுத்து நடிகை காஜல் அகர்வாலிடம் தற்போது பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனாலும் இது பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.