காஜல் இஸ் பேக்..!!

 
1

முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால், கடந்த 2020-ம் ஆண்டில் மும்பையை சேர்ந்த தொழில் அதிபரான கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகு ‘ஹே சினாமிகா’ எனும் படத்திலும், ‘லைவ் டெலிகாஸ்ட்’ எனும் திகில் வெப் தொடரில் மட்டும் நடித்திருந்தார்.

கடந்த ஆண்டில் தான் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் அறிவித்த காஜல் அகர்வால், தொடர்ந்து கர்ப்ப காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய உணவுபழக்கம், மேற்கொள்ள வேண்டிய உடற்பயிற்சிகள் குறித்து வீடியோவாக வெளியிட்டு வந்தார். கர்ப்ப காலத்திலும் போட்டோஷூட் எடுத்து வெளியிட்டார்.

சமீபத்தில் காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்தது. மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்த தகவலை அறிவித்தார்.

தற்போது பிரசவத்துக்கு பின்னர் மீண்டும் அவர் போட்டோஷூட் நடத்தியுள்ளார். மாடர்ன் உடை அணிந்தபடி கலக்கலாக புகைப்படங்கள் எடுத்து, அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

From Around the web