திருமணத்திற்கு பிறகு இளம் காதல் ஜோடியின் வாழ்க்கையை ஆராயும் ஒரு காதல் நாடகம் தான் "காலங்களில் அவள் வசந்தம்"..!!
Thu, 4 Aug 2022

பிரபல தயாரிப்பாளரான சி.வி.குமார் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘காலங்களில் அவள் வசந்தம்’. முழுக்க முழுக்க புதுமுக நடிகர்கள் நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
பிரபல மாடலான கௌஷிக் ராம் இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ‘நெடுநல்வாடை’ படத்தில் நடித்த அஞ்சலி நாயர் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ரொமான்ஸ் ஜோனரில் உருவாகி வரும் இப்படம் ஒரு இளம் காதல் ஜோடியின் திருமணத்திற்கு பிறகு வாழ்க்கையை ஆராயும் ஒரு காதல் நாடகம்தான்.
இந்நிலையில் விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.