மே மாதம் ரிலீஸுக்கு தயாரான ”கள்ளபார்ட்”!!
Apr 21, 2022, 20:17 IST

நடிகர் விக்ரம் மில்க் பியூட்டி தமன்னா நடிப்பில் வெளிவந்த ”ஸ்கெட்ச்” படத்தை தயாரித்த மூவிங் பிரேம்ஸ் படநிறுவனம் தற்போது அரவிந்த்சாமி ரெஜினா நடித்துள்ள ” கள்ளபார்ட் ” படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ளது.
கதாநாயகனாக அரவிந்த்சாமி நடித்துள்ளார் கதாநாயகியாக ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ளார். பார்த்தி, ஆதேஷ் பாலா, பேபி மோனிகா, ஹரிஷ் பெறாடி ஆகியோர் முக்கிய பத்திரத்தில் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது….இதுவரை யாரும் தொடாத ஒரு கதைகளைதை இதில் பார்க்கலாம்
படத்திற்காக பல லட்சம் ரூபாய் செலவில் நான்கு செட்டுகள் அமைக்கப்பட்டு மிகப்பிரம்மாண்டமாக படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம்.அந்த காட்சிகள் திரையில் பார்க்க பிரம்மிப்பாக இருக்கும்.படம் நிச்சயம் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என கூறினார்.