பகத் பாசில் படத்தின் டிரைலரை வெளியிட்ட கமல் நெகிழ்ச்சி ட்வீட்..!! 

 
1

நடிகர் பகத் பாசில், நடிகை ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் 'மலையன்குஞ்சு'. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சுமார் 30 வருடங்களுக்குப் பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் நேரடி மலையாள படத்திற்கு இசையமைத்துள்ளதால், இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டிரைலரை நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் தனது ட்விட்டர் பதிவில், "எப்பொழுதும் மேன்மை வெல்லட்டும். முன்னேறி செல்லுங்கள் பகத். எனது ஏஜெண்ட்டுகள் அனைவரும் வெற்றி பெற வேண்டும். தோல்வி என்பது ஒரு தேர்வு அல்ல. ஒரு குழு என்றால் என்ன என்பதைக் காட்டுங்கள்" என்று கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். 

அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற விக்ரம் திரைப்படத்தில், நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில் உள்ளிட்டோர் ரகசிய உளவாளி அமைப்பின் ஏஜெண்ட்டுகளாக நடித்திருந்தனர். அதை குறிப்பிடும் வகையில் கமல்ஹாசன் வெளியிட்ட டுவிட்டர் பதிவு, தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.


 

From Around the web