22 ஆண்டுகள் கழித்து மீண்டும் வெளியாகிறது கமலின் ‘ஆளவந்தான்’..?

 
1

2001-ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 'ஆளவந்தான்' திரைப்படம் வெளியானது. இந்த படம் வெளியான அந்த காலக்கட்டத்தில் பெரிய வரவேற்பை பெறாவிட்டாலும் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த படத்திற்கு கதை, திரைக்கதை வசனங்கள் முழுவதும் கமல் தான். சுரேஷ் கிருஷ்ணா படத்தை இயக்க மட்டும் செய்தார். ஆளவந்தான் படத்தில் கமல் இரட்டை வேடங்களில் மிரட்டியிருந்தார். 

இந்த படத்தில் பல புதிய தொழில்நுட்பங்களை அப்போதே கமல் பயன்படுத்தியிருந்தார். கட்டிங் எட்ஜ் கிராபிக்ஸ், மோஷன் கண்ட்ரோல் கேமரா, ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட் டெக்னாலஜி என பலவிதமான விஷயங்களில் இப்படம் மேக் செய்யப்பட்டது. அதனால் இப்படம் பல விருதுகளை குவித்து சாதனை படைத்தது. 

இந்நிலையில் கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்த இந்த படம் சுமார் 22 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் சுமார் 1000 ஆயிரம் திரையரங்குகளில் உலக முழுவதும் வெளியாகவுள்ளது. இது குறித்து கலைப்புலி எஸ் தாணு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், விரைவில் திரையரங்குகளில் உங்களை ஆள வருகிறான் என்று கூறியுள்ளார். அதோடு வெல்லுவான் புகழ் அள்ளுவான் என்று வாசகத்துடன் மிரட்டலான போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. 


 

From Around the web