தன்னை தானே திருமணம் செய்து கொண்ட தியா அவுர் பாத்தி ஹம் புகழ் கனிஷ்கா சோனி..!!

 
1

 தியா அவுர் பாத்தி ஹம் புகழ் கனிஷ்கா சோனி என்ற நடிகை தன்னைத் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகை தியா, நடிகை டெவோன் கே தேவ் மஹாதேவ், பவித்ரா ரிஷ்டா மற்றும் மகாபலி ஹனுமான் போன்ற நிகழ்ச்சிகளில் இடம்பெற்று மக்களின் மனதில் இடம்பிடித்தவர். இவர் தற்போது பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதில், ‘‘இந்திய கலாச்சாரத்தில் நம்பிக்கை கொண்டவள் நான். திருமணம் என்பது வெறும் செக்ஸ் மட்டுமல்ல, அது காதல் மற்றும் நேர்மை பற்றியது என்று பதிவிட்டுள்ளார். மேலும் திருமணத்தை உறுதி செய்யும் வகையிலான 2 புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.  எனது தேவைகளை நானே நிறைவேற்றிக் கொள்கிறேன். என்னை நானே காதலிப்பதால், எனக்கு எழும் சந்தேகங்களை நானே பூர்த்தி செய்து கொள்கிறேன். எனக்கு எந்த ஆணும்  தேவையில்லை. தனியாக வாழ்வதில் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது. எனக்குள் சிவன் மற்றும் சக்தியின் குணங்கள் நிறைந்துள்ளன’’ என்று பதிவிட்டுள்ளார்.

பலர் இந்த பதிவுக்கு பல்வேறு கருத்துகளை தெரிவித்திருந்தனர். அதிலும் ஒருவர், இந்த பதிவை செய்யும் போது மதுபோதையிலோ அல்லது கஞ்சா போதையிலோ செய்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகை தியா, மனதளவில் நான் ஒரு இந்தியன். சினிமா துறையில் நீண்ட காலம் உழைத்து எனது இலக்கை அடைய விரும்புகிறேன். அமெரிக்காவில் நான் தற்போது இருப்பதால் ஹாலிவுட் படங்களில் எனது கவனம் சென்றுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

From Around the web