கவனத்தை ஈர்த்த கருணாஸின் ஆதார் பட ட்ரைலர்..!!
Thu, 21 Apr 2022

அம்பானி, திருநாள் ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ்.ராம்நாத் இயக்கிய படம் ஆதார்.இந்த படத்தில் கருணாஸ் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தில் ரித்விகா கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகை இனியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இவர்களுடன் அருண்பாண்டியன், ஆனந்தபாபு, திலீப், மனிஷா யாதவ் உள்ளிட்டோர் நடித்துள்ளார்.இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் மட்டும் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியாகியுள்ளது. க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகை இனியா வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார். இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.