எனக்கும் அத்தை மாதிரி அடக்க ஒடுக்கமான பொண்ணு பாரு மாமா - வெளியான கட்டா குஸ்தி டிரெய்லர்..!!
தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் விஷ்ணு விஷால். அதனால் இந்த படத்தை விஷ்ணு விஷால் மற்றும் தெலுங்கு நடிகர் ரவி தேஜா இணைந்து தயாரித்து வெளியிடுகின்றனர்.
மல்யுத்தத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் குஸ்தி வீரராக விஷ்ணு விஷால் நடித்து வருகிறார். அதனால் இந்த படத்திற்கு ‘கட்டா குஸ்தி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. செல்லா அய்யாவு இயக்கும் இப்படத்தில் பொன்னியின் செல்வனில் பூங்குழலியாக கலக்கிய நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் உருவாகியுள்ளது
படம் வரும் டிசம்பர் 2 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வாங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் இந்த படம் தமிழில் வெளியாகும் அதே நேரத்தில் மட்டி குஸ்தி என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியாக உள்ளது. இந்நிலையில், படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.