க்யூட்டாக ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த கயல் ஆனந்தி!

 
1

 பிரபு சாலமன் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு வெளியான ‘கயல்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஆனந்தி. இந்த  படத்தில் நடித்தன் மூலம் பெரும் புகழ்பெற்றதால் ‘கயல் ஆனந்தி’ என பெயர் மாற்றம் அடைந்தார்.

தெலங்கானாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் முதலில் தெலுங்கு படத்தில் தான் நடிகையாக அறிமுகமானார். பின்னர் வெற்றிமாறன் தயாரித்த பொறியாளன், பிரபு சாலமனின் கயல் ஆகிய படங்களின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். அந்தப் படத்தைத் தொடர்ந்து சண்டி வீரன், த்ரிஷா இல்லனா நயன்தாரா, விசாரணை ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் கவனம் பெற்றார். மாரி செல்வராஜ் இயத்தில் 2018-ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தில் ஜோ என்ற கதாபாத்திரத்தில் கதிருக்கு ஜோடியாக நடித்திருந்த ஆனந்திக்கு அந்தப் படம் பெரும் பெயரை பெற்றுக் கொடுத்தது.

 இந்நிலையில் கயல் ஆனந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ  ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் தமிழ், மலையாளம் ரசிகர்களுக்கு க்யூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:  என்னுடைய படம் யூகி ரிலீஸ் ஆகிருக்கு. மலையாளத்திலும் ரிலீஸ் ஆகிருக்கு. அனைவரும் படத்தின் டிரைலரை பாருங்கள். டிரைலர் பிடித்திருந்தால் படத்தையும் பாருங்கள்.   


 

From Around the web