மட்டமாக பேசிய பெண்ணிற்கு பதிலடி கொடுத்த குஷ்பு..!

 
1

நடிகை குஷ்பூ தற்போது நடிப்பதை தாண்டி அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதில் சில காலம் செம குண்டாக இருந்த குஷ்பு, கடந்த ஆண்டு கடுமையான உடற்பயிற்சின் மூலம் ஒல்லியான தோற்றத்துக்கு மாறி உள்ளார். அவர் உடல் எடையை குறைத்ததைப் பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டனர்.
 
இதையடுத்து நடிகை குஷ்பு, ஒல்லியான உடம்பில் விதவிதமான ஆடைகளை அணிந்து புகைப்படங்கள் எடுத்து அதனை தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். 

1

அந்த வகையில் சமீபத்தில் கோல்டன் நிறத்தில் இருக்கும் மாடர்ன் உடை ஒன்றை அணிந்து அவர் போட்டோ ஒன்றை பதிவிட்டிருந்தார் . இதைப்பார்த்த ரேகா என்ற பெண் , அழகாகத்தான் இருக்கிறீர்கள். ஆனால் ஏன் பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் தோல் திருத்தங்களை செய்ய வேண்டும்? உங்களுடைய நல்ல தோற்றத்துடனே நீங்கள் வயதாகலாம் என கமெண்ட் செய்துள்ளார் .

1

அவரின் அந்த கமெண்டுக்கு தரமான பதிலடி கொடுத்த குஷ்பு கூறியதாவது :நீங்க தான் அதுக்கு காசு கொடுத்தீங்களா மை டியர்..? மத்தவங்கள துன்புறுத்தி கிடைக்கும் சந்தோஷத்தில் உங்களுக்கு அப்படி என்ன கிடைக்குதுனு தெரியல. உன்னை நினைச்சா ரொம்ப அவமானமா இருக்கு என சிறப்பான தரமான பதிலடி கொடுத்துள்ளார் குஷ்பு.

From Around the web