பசங்க படத்தில் நடித்த கிஷோருக்கும் பிரபல சீரியல் நடிகைக்கும் விரைவில் டும் டும் டும்..!! 

 
1

பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான ‘பசங்க’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் கிஷோர்.அப்படத்தில் அன்புக்கரசு என்ற கதாபாத்திரத்தில் நடித்த சிறுவன் கிஷோருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது கிடைத்தது. இவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

இந்த படத்திற்கு பிறகு கோலிசோடா, கோலி சோடா 2 ஆகிய படங்களில் நடித்திருந்தார். இதையடுத்து வஜ்ரம், நெடுஞ்சாலை, ஹவுஸ் ஓனர் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். 

நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் கல்லூரி படிப்பை பாதியிலேயே கைவிட்டு நடிப்பில் முழு கவனத்தையும் செலுத்தி வந்த நடிகர் கிஷோர் சோசியல் மீடியாவில் எப்போதுமே ஆக்டிவ். சமீபத்தில் கிஷோர் இன்ஸ்டா போஸ்ட் மூலம் தனது காதலியை அறிமுகப்படுத்தியுள்ளார். 

தற்போது கிஷோருக்கு 28 வயதாகிறது, இவர் பிரபல சீரியல் நடிகையான ப்ரீத்தி குமாரை காதலித்து வருகிறார்.  ப்ரீத்தி நடிப்பதை கடந்து மாடல், தொகுப்பாளர் என திகழ்ந்து வருகிறார். இவர் லட்சுமி வந்தாச்சு, நெஞ்சம் மறப்பதில்லை, பிரியமானவள், சுந்தரி நீயும் சுந்தரி நானும், வானத்தப்போல போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். 32 வயதாகும் இவர் தன்னை விட நான்கு வயது சிறியவரான கிஷோரை அடுத்த ஆண்டு திருமணம் செய்ய இருக்கிறார்.

ப்ரீத்திக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள நடிகர் கிஷோர் "நமது திருமண நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அடுத்த ஆண்டு நாம் இருவரும் கணவன் மனைவியாக சேர்ந்து பிறந்தநாளை கொண்டாடுவோம். லவ் யூ அச்சோமா!!! என பதிவிட்டு இருந்தார். பசங்க படத்தில் மிகவும் புத்திசாலியான அன்பு பையனுக்கு கல்யாண வயசு வந்துடுச்சா என ஆச்சரியத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள். 

From Around the web