வைரலாகும் கிருத்திகா உதயநிதியின் ட்வீட்!

 
1

உதயநிதியின் மனைவி கிருத்திகா தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தகுந்த பெண் இயக்குநர்களுள் ஒருவர். வணக்கம் சென்னை, காளி ஆகியப் படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் பேப்பர் ராக்கெட் என்ற வலைதொடரை இயக்கி, பாராட்டுகளைப் பெற்றிருந்தார்.

இந்நிலையில் கடந்த 2013 ஆகஸ்ட் மாதத்தில், ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடிய உதயநிதியிடம், ”டின்னருக்கு என்ன வேண்டும்?” எனக் கேட்டிருக்கிறார் கிருத்திகா. அதற்கு, மிகக் கடினமான கேள்வி, என்ற உதய்க்கு, (ஏ) தோசை, (பி) தோசை, (சி) தோசை, (டி) தோசை என ஆப்ஷன்களைக் கொடுத்திருக்கிறார் கிருத்திகா.

அதனை இப்போது நெட்டிசன் ஒருவர் ஸ்கிரீன் ஷாட் எடுத்து உலவ விட்டிருந்தார். அந்த ட்வீட்டை ரீ-ட்வீட் செய்த கிருத்திகா உதயநிதி, “10 வருடங்கள் கழித்தும் அதே ஆப்ஷன்கள்” தான் எனப் பதிவிட்டிருக்கிறார்.


 


 

From Around the web