விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு குவியும் பாராட்டுக்கள்..!! அப்படி என்ன செஞ்சாங்க தெரியுமா ?

 
1

தமிழகத்தில் நடிகர் விஜய் பெயரில் விஜய் மக்கள் இயக்கம் தொடர்ந்து மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. குறிப்பாக ஏழைகள் பயன்பெறும் வகையில், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் நடிகர் விஜய் தனது ரசிகர்களை சந்தித்து உரையாடியபோது, தொடர்ந்து நல்ல விஷயங்களை செய்யும்படி ஊக்கப்படுத்தியதாக கூறப்பட்டது.

இதையடுத்து, தற்போது சென்னை புறநகரில் வீடில்லாமல் தெருவோரம் வசிக்கும் 80 பேருக்கு விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் போர்வை வழங்கி  உதவியுள்ளனர்.

மழை சீசனோடு, தற்போது குளிரும் அதிகமாக இருப்பதால், இந்த போர்வை அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என அந்த பகுதியைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர். விஜய் மக்கள் இயக்கத்தினரின் இந்த சேவைக்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

From Around the web