வாரிசு படத்தின் குஷ்பூ நடித்த காட்சிகள் நீக்கம்..?
Jan 13, 2023, 10:05 IST

தளபதி விஜய் நடித்த வாரிசு படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதை அவர் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்
வழக்கமான மாஸ் படமாக இல்லாமல், வாரிசு குடும்ப ரசிகர்களை கவரும் வகையில் முழுக்க முழுக்க உருவாக்கப்பட்டு இருக்கிறது. சீரியல் போல இருக்கிறது என ஒரு தரப்பினர் இதை விமர்சித்தும் வருகின்றனர்.
வாரிசு படத்தில் அதிக அளவு பிரபலங்கள் நடித்து இருக்கிறார்கள். சரத்குமார் தொடங்கி பிரகாஷ்ராஜ் வரை எக்கச்சக்க பிரபலங்கள் நடித்து இருக்கின்றனர். அதில் நடிகை குஷ்புவும் ஒரு சின்ன கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கிறார் என சொல்லப்பட்டது.
ஆனால் தற்போது படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை படத்தில் காணவில்லையே என கலாய்த்து வருகின்றனர்.வாரிசு இயக்குனர் படத்தின் நீளம் கருதி குஷ்பூவின் காட்சிகளை நீக்கி இருக்கலாம் என தெரிகிறது.