தெலுங்கு திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் மரணம்..!! திரையுலகினர் அதிர்ச்சி..!!

 
1

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடன இயக்குனரான டினா சிது, சமீபத்தில் கோவா சென்றிருந்தார். அங்கு அவருக்கு  திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் ஜீ தெலுங்கில் ஒளிபரப்பான ஆத்தா டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் டினா வெற்றி பெற்றவர். பின்னர், தெலுங்கு படங்களில் சில பாடல்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றினார். நடன ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் இருந்தார்.

திருமணத்திற்கு பிறகு கோவாவில் குடியேறி டினா, அங்கு கணவருக்கு சொந்தமான ரிசார்ட் தொழிலை கவனித்து வந்தார். டினாவின் பெற்றோர் ஐதராபாத்தில் உள்ள நல்லகுண்டாவில் வசித்து வந்தனர். மகளின் மரணம் குறித்து கேள்விப்பட்ட அவர்கள் கோவாவுக்கு விரைந்தனர்.

இந்நிலையில் இவரது மரணம் குறித்து சக நடன இயக்குனர்களும், தெலுங்கு திரையுலக பிரபலங்களும் தங்களது இரங்கல்களை சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகின்றனர்.

டினாவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான சந்தீப், தனது சமூக வலைத்தளத்தில் டீனாவுடன் இருந்த புகைப்படங்களை பதிவு செய்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதில், டீனா இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் மிகச்சிறந்த நடன இயக்குனர்களில் ஒருவர் என்றும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்றும் சந்தீப் தெரிவித்துள்ளார்.

From Around the web