காருக்கு ஃபேன்ஸி எண் வாங்க 11 லட்சம் செலவழித்த முக்கிய பிரபலம் ..! 

 
1

கார், பைக்குகளை விரும்பி வாங்கும் கோடீஸ்வரர்கள் பலர் அந்தக் காருக்கு, விருப்பப்பட்ட ஃபேன்ஸி எண் வாங்குவதற்கு அதிக அளவில் பணம் செலவுசெய்வார்கள். அந்த வகையில் ஆர்ஆர்ஆர் பிரபலமும் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவின் பேரனான ஜூனியர் என்டிஆர் பல லட்சங்கள் செலவு செய்து தனது காருக்கு ஃபேன்ஸி எண் வாங்கியுள்ள தகவல் வெளியாகியுள்ளது .

2001 ஆம் ஆண்டு ஸ்டுடண்ட் நம்பர் 1 திரைப்படம் மூலம் திரையுலகுக்கு வந்திருந்தாலும், திரைப்படங்களைக் கடந்து கார்கள் மீது எப்போதும்  ஜூனியர் என்டிஆர்க்கு அலாதி பிரியம் இருந்துள்ளது.

இதனால் வீட்டில் வரிசையாக கார்களை வாங்கிக் குவித்துள்ளாராம். பிஎம்டபள்யூ முதல் ரோல்ஸ் ராய் வரை கார்களை வாங்கி நிறுத்தியிருக்கும் அவர், அந்த கார்களுக்கு தான் ராசியாக எண்ணும் 9999 என்ற சீரியல் எண்ணையே நம்பராக வாங்கி வைத்துள்ளாராம். குறிப்பாக, அவருடைய பிஎம்டபள்யூ காருக்கு தன்னுடைய ராசியான எண்ணான 9999 -ஐ வாங்க, கிட்டதட்ட 11 லட்சம் ரூபாய் செலவழித்து அந்த எண்ணை வாங்கியிருக்கிறார். 

1
 

From Around the web