பிரபல நடிகை ராஷி கண்ணாவுக்கு லிப் கிஸ்..!! 

 
1

இரும்புத் திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரு வேடங்களில் நடித்துள்ள படம்தான் சர்தார். நேற்று முன்தினம் உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் கார்த்தியுடன், லைலா, ராசி கண்ணா, முனிஸ்காந்த், ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

1

இப்படத்தின் நாயகியான ராசி கண்ணா ஏற்கனவே இமைக்கா நொடிகள், அடங்க மரு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக்தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

இந்நிலையில், ‘சர்தார்’ பட போஸ்டர் ஒன்று சுவற்றில் ஒட்டப்பட்டிருந்ததை பார்த்த போதை ஆசாமி ஒருவர், சர்தார் ஹீரோயின் ராசி கண்ணாவின் கன்னம் மற்றும் உதடு என மாறி மாறி போஸ்டரில் கிஸ் அடிக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 

From Around the web