திடீரென சமூக வலைத்தளங்களில் இருந்து விலகிய லோகேஷ் கனகராஜ்..!! 

 
1

நடிகர் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விக்ரம். இப்படம் யாரும் எதிர்பாராத அளவில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. தமிழ் சினிமாவையே புரட்டிப் போடும் அளவிற்குச் சிறப்பான திரைக்கதையை லோகேஷ் கனகராஜ் திறமையாகச் செய்திருந்தார்.

இதற்கு முன்பு இவரது இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர் போன்ற திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. தற்போது மீண்டும் நடிகர் விஜய்யுடன் கூட்டணி அமைக்க உள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என ஒரு தகவல் பரப்பி வருகிறது. தற்போது அவர் சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றைப் போட்டு உள்ளார்.

அந்த பதிவில்," நான் தற்காலிகமாகச் சிறிது காலம் அனைத்து சமூக வலைத்தளங்களில் இருந்து இடைவெளி எடுத்துக் கொள்ளப் போகிறேன். எனது அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்போடு உங்களை விரைவில் வந்து சந்திப்பேன். அனைவரும் உங்களைக் கவனித்துக் கொள்ளுங்கள் என்றும் அன்புடன் லோகேஷ் கனகராஜ்" எனத் தெரிவித்து இருந்தார்.


 


 

From Around the web