பிரபல சீரியல் நடிகைக்கு ஏற்பட்ட நிலையை பாருங்க..!! ஆறுதல் கூறும் ரசிகர்கள்..!! 

 
1

ராஜா ராணி சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் செம்பாவாக வாழ்ந்தவர் ஆல்யா மானசா. ராஜா ராணி சீரியலில் தன்னுடன் நடித்த சஞ்சீவை காதலித்து கரம் பிடித்தார். பின்பு முதல் குழந்தைக்காக சீரியலில் இருந்து கேப் எடுத்தார். ஐலா பாப்பா பிறந்து சில மாதங்கள் கழித்து ராஜா ராணி 2 மூலம் மீண்டும் எனட்ரி கொடுத்தார் ஆல்யா.

சந்தியாவாக ராஜா ராணி 2 சீரியலில் கலக்கினார்.பின்பு 2 வது குழந்தைக்காக ஆல்யா சீரியலை விட்டு சில மாதங்களுக்கு முன்பு விலகினார்.

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியலின் கதாநாயகியாக நடித்து வருகிறார்.இந்த நிலையில் ஆலியா மானசாவின் கால்களில் அடிபட்டு பெரிய கட்டு போடப்பட்டிருக்கிறது. தன்னுடைய கால்களில் எப்படி அடிபட்டது என்பதை தெரிவிக்காத ஆலியா மானசா, ஹாஸ்பிட்டலில் இருந்தபடியே கால்களில் கட்டு போட்டிருக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களிடம் உருக்கமான வார்த்தைகளை பகிர்ந்து இருக்கிறார்.

1

தான் எதிர்பார்க்காத ஒன்று தன்னுடைய வாழ்க்கையில் நடந்து விட்டது என்று கூறிய அவர், கால்களில் முறிவு ஏற்பட்டுள்ளது என்றார். தன்னுடைய நண்பர்கள் மற்றும் அன்பான ரசிகர்கள் எனக்காக கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள் என்று கூறிய அவர், எளிமையாக குணமடைய வேண்டும் என சோகத்தோடு ஆலியா மானசா வெளியிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

சன் டிவியில் இனியா சீரியலில் ஆலியா நடிக்க தொடங்கி பிறகு அதன் டி.ஆர்பி. ஏறியதாக கூறப்படுகிறது. அந்த அளவிற்கு அவருக்கு ரசிகர் வட்டம் உள்ளது. இந்த நிலையில் ஆலியா மானசா வெளியிட்ட வீடியோவிற்கு ரசிகர்கள் பலர் ஆறுதல் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

From Around the web