விரைவில் டிவியில் ஒளிப்பரப்பாகிறது லவ் டுடே படம்... எப்போ ? எங்க தெரியுமா ? 

 
1

குறும்படங்கள் இயக்கி வந்த பிரதீப் ரங்கநாதன் ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' படத்தின் மூலம் வெள்ளித்திரையில் இயக்குனராக அறிமுகமானார். அந்தப் படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

அதன் பின்,பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்துள்ள படம் லவ் டுடே. நடிகை இவானா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு மற்றும் அஜீத் காலிக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

1

 2கே கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்து போன இந்த படத்தில் காதல், காமெடி, எமோஷன், சென்டிமெண்ட் என எதற்கும் பஞ்சமே கிடையாது. படம் தமிழகத்தை கடந்து உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வருகிறது.

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தெலுங்கிலும் இப்படம் டப் செய்யப்பட்டு வெளியானது. அங்கு இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் வரும் பொங்கலுக்கு கலைஞர் தொலைக்காட்சியில் வெளியாகவிருக்கிறது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தெலுங்கிலும் இப்படம் டப் செய்யப்பட்டு வெளியானது. அங்கு இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. 

1

இந்நிலையில் இப்படம் வரும் பொங்கலுக்கு டிவியில் ஒளிபரப்பாக போகிறது. கலைஞர் தொலைக்காட்சியில் வெளியாகவிருக்கிறது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

From Around the web