‘லவ் யூ நானா’ மகேஷ் பாபுவின் உருக்கமான பதிவு..!!
 

 
1

பிரபல நடிகர் மகேஷ் பாபுவின் தந்தை கடந்த நவம்பர் 15-ம் தேதி மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகர் தயாரிப்பாளர், இயக்குநர் என பல தளங்களில் காலடி பதித்த தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா மறைவிற்கு பலருமே இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில்,தற்பொழுது நடிகர் மகேஷ் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் தந்தை குறித்து உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார்.

photo

“உங்கள் வாழ்க்கை கொண்டாடப்பட்டது. உங்களின் மறைவு அனுசரிக்கப்பட்டது. அது உங்களின் மகத்துவம். நீங்கள் பயமின்றி உங்கள் வாழ்க்கையை வாழ்ந்தீர்கள். துணிச்சல் உங்களின் இயற்கையான குணம். என்னுடைய உத்வேகம் நீங்கள். என் தைரியம் நீங்கள். என்னுடைய எல்லாமுமாக இருந்த நீங்கள் சென்றுவிட்டீர்கள். ஆனால் விசித்திரமாக, நான் இதுவரை உணராத வலிமையை என்னுள் உணர்கிறேன். இப்போது நான் அச்சமின்றி இருக்கிறேன். உங்கள் ஒளி என்னுள் என்றென்றும் பிரகாசிக்கும். உங்கள் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வேன். உங்களை மேலும் பெருமைப்படுத்துவேன்... லவ் யூ நானா.. என்னுடைய சூப்பர் ஸ்டார்" என உருக்கமான பதிவு ஒன்றையும், தந்தையின் பழைய புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.


 

From Around the web