பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து முக்கிய பிரபலம் விலகல்..!! 

 
1

விஜய் டிவியில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இந்த தொடர் தற்போது 1000 எபிசோடுகளை நெருங்க உள்ளது. இந்த சீரியல் கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் கதைக்களத்தை கொண்டு உருவாகி ஒளிப்பரப்பாகி வருகிறது. தமிழில் இந்த சீரியல் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த பின்பு தெலுங்கில் ‘வடிநம்மா’ என்ற பெயரிலும், கன்னடத்தில் ‘வரலக்‌ஷ்மி ஸ்டோர்ஸ்’ என்று 8 மொழிகளில் ஒளிபரப்பாக தொடங்கியது. இதில் தெலுங்கில் மட்டும் பாதியிலே சீரியல் முடிக்கப்பட்டது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முதலில் முல்லையாக  நடித்த விஜே சித்ரா,தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விஜே சித்ராவின் மறைவுக்கு பிறகு, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில், ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடித்து வந்த காவியா அறிவுமணி நடிக்கத் தொடங்கினார்.முதலில் ரசிகர்கள் அவரை அவ்வளவாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், போகப்போக வரவேற்பைப் பெற்றார்.

1

விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியலில் பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் குடும்பத்தில் ஒன்றாக இருந்த கதிர் - முல்லை ஜோடி, தற்போது பிரிந்து சென்று ஓட்டல் நடத்தி வருகின்றனர். ஆனால் ஓட்டல் தொழில் நன்றாக செல்லவில்லை. அதனால் அடுத்த என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், சின்னத்திரை இல்லாமல் வெள்ளித்திரையிலும் தனது பயணத்தை காவ்யா தொடங்கி விட்டார். மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாக நடித்திருக்கும் படம் ரிப்பப்பரி. ஹாரர் காமெடி படத்தில் மகேந்திரனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் காவ்யா . அதே போல் கவின், நயன்தாரா – விக்னேஷ் சிவன் தயாரிப்பில் ‘ஊர் குருவி’ திரைப்படம் உருவாகிறது. இந்த படத்தில், நடிக்க காவியா அறிவுமணிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 இந்நிலையில் நேற்றைய தினம் காவ்யா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் MISS U ALL என்று குறிப்பிட்டு ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். காவ்யா அறிவுமணி விலகல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. காவ்யா அறிவுமணி, சினிமாவில் நடிக்கவுள்ளதால் இந்த முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

1

From Around the web