‘லால் சலாம்’ படத்திலிருந்து முக்கிய பிரபலம் விலகல் ?

 
1

சூப்பர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கும் மூன்றாவது படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.  ‘லால் சலாம்’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்‌.ரகுமான் இசையமைக்கவுள்ளார்.அவர் இயக்கத்தில் ‘3’, ‘வைராஜா வை’ ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது. 

இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார். நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாகவும், விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளனர். கிரிக்கெட் கதைக்களத்தை கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. 

1

இந்த படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா பணியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் திடீரென ‘லால் சலாம்’ படத்தில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், முதற்கட்ட பணிகளின் போது கருத்து வேறுபாடு காரணமாக நான் ‘லால் சலாம்’ படத்தில் இனி பணிபுரிய போவதில்லை. இனி வரும் போஸ்டர்களில் இருந்து என் பெயரை நீக்கி விடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.  ஐஸ்வர்யாவும், பூர்ணிமாவும் நீண்ட நாள் தோழிகளாக உள்ளனர். திடீரென பூர்ணிமா இந்த படத்திலிருந்து விலகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 

From Around the web