ஆடம்பர கார் வாங்கிய மைனா நந்தினி..!! விலை எவ்வளவு தெரியுமா ?
Updated: Jul 9, 2022, 12:11 IST
விஜய் டிவியில் இருக்கும் சீரியல் நடிகர், நடிகைகள், தொகுப்பாளினிகள் ஆகியோர்க்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது என்பதும் படிப்படியாக ஒவ்வொருவராக சொந்த கார் வாங்கி வருகிறார்கள் என்பதையும் வரிசையாக பார்த்து வந்தோம்.

இந்த நிலையில் தற்போது கார் வாங்கிய விஜய் டிவி பிரபலங்களின் பட்டியலில் மைனா நந்தினி இணைந்துள்ளார். மைனா நந்தினி மற்றும் அவரது கணவர் யோகேஸ்வரன் ஆகிய இருவருமே விஜய் டிவியில் உள்ள பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது அவர்கள் புதிய கார் வாங்கி உள்ள புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர். இவர் கியா காரென்ஸ் கார் வாங்கியுள்ளாராம். இதன் விலை 15 முதல் 17 லட்சமாம்.
 - cini express.jpg)