மெகா மாஸ் அப்டேட்..!! 1987-ம் ஆண்டிற்கு பின் மீண்டும் இணையும் கமல்ஹாசன் -  மணிரத்னம் கூட்டணி!!
 

 
1

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1987-ம் ஆண்டு வெளியான ‘நாயகன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. படம் வெளியாகி 35 ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட ரசிகர்களால் தொடர்ந்து கொண்டாடப்படும் படமாக உள்ளது. பல சந்தர்ப்பங்களில் இருவரும் இணைவதாக சொல்லப்பட்டாலும் அது நடக்கவில்லை. இந்த சூழலில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

KH-234

இது தொடர்பாக இன்று வெளியாகியுள்ள அறிவிப்பில், இப்படத்தை மணிரத்னம் இயக்குவதாகவும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘உலகநாயகன் கேஎச் 234’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை கமல்ஹாசன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இணைந்து தயாரிக்கின்றனர். மேலும் மணிரத்னம், ஆர்.மகேந்திரன், சிவா ஆனந்த் ஆகியோரும் தயாரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கமல்ஹாசன் நடித்துள்ள ‘விக்ரம்’ திரைப்படம் மெகா ஹிட்டான நிலையில், அவர் அடுத்ததாக ஷங்கரின் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கிறார். அதுபோல மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் பெரும் வெற்றியை பதிவு செய்த நிலையில், இரண்டாம் பாகமும் வேகமாக தயாராகி வருகிறது. இதனைத் தொடர்ந்து 2024-ம் ஆண்டு கமல் - மணிரத்னம் கூட்டணியில் இப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

From Around the web