மெளன ராகம், ஈரமான ரோஜாவே 2 சீரியல் இயக்குநர் திடீர் மரணம்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்
எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான ‘நியூட்டனின் மூன்றாம் விதி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தாய் செல்வன். இந்த படத்திற்கு முன் ‘காத்து கருப்பு’ என்ற சீரியலை இயக்கி இருந்தார். அதன்பின் 2015-ம் வெளியான ‘ஆவி குமார்’ படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.

அதன் பின்னர் பல சின்னத்திரை சீரியல்களையும் தாய் செல்வம் இயக்கினார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் பெரிய ஹிட் கொடுத்த மெளன ராகம் 1, நாம் இருவர் நமக்கு இருவர், காத்து கருப்பு, கல்யாணம் முதல் காதல் வரை, தாயுமானவன், பாவம் கணேசன் உள்ளிட்ட பல சீரியல்களை இயக்கியுள்ளார்.
மேலும் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஈரமான ரோஜாவே 2, தொடரையும் இயக்கி வருகிறார். இந்த தொடரில் திரவியம், கேப்ரில்லா, சித்தார்த், சுவாதி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இந்த தொடர் தொடங்கிய நாள் முதல் தற்போது வரை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

முன்னதாக மெளன ராகம் 1 பெரிய ஹிட் கொடுத்ததை தொடர்ந்து அதன் அடுத்த பாகம் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த நிலையில், அண்மையில் நுரையீரல் பாதிப்பு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 - cini express.jpg)