குக் வித் கோமாளி புகழ் பெயரை பயன்படுத்தி பண மோசடி..!! 

 
1

 குக் வித் கோமாளி புகழ் தனது பெயரை பயன்படுத்தி சிலர் பணம் பெற்று ஏமாற்றுவதாக தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்று தன்னுடைய பெயரை பயன்படுத்தி சிலர் பணம் பெறுகின்றனர்.

நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி குறித்து நானே தெரிவிப்பேன். அதனால் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நடிகர் புகழ் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் வெளியான முன்னணி நடிகர்களான அஜித் குமார், சூர்யா, உள்ளிட்டோரின் வலிமை, எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். மேலும் இவரது நடிப்பில் சில படங்கள் வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன.

From Around the web