ஏ.கே 61 படத்தில் இணையும் அசுரன் பட நடிகை..!!
Fri, 6 May 2022

வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அஜித் குமார்.
வங்கிக் கொள்ளை சம்பந்தப்பட்ட கதையில் உருவாகும் இந்த படத்தில் அஜித் குமார் ஹீரோ- வில்லன் என இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் அஜித்குமார் படத்தில் மலையாள நடிகை மஞ்சுவாரியார் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அசுரன் படத்தில் எதார்த்தமான நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மஞ்சுவாரியர்.
அஜித் 61 படத்தின் லுக் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் மஞ்சுவாரியர் இணையும் தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.