மக்களால் அதிகம் பேசப்பட்ட படம் விரைவில் ஒடிடியில்..? 

 
1

தமிழ்நாட்டின் பிரபல தொழிலதிபரான லெஜெண்ட் சரவணன் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான படம் தி லெஜெண்ட். விசில் படத்தை இயக்கிய இயக்குனர்கள் ஜேடி ஜெர்ரி இந்தப் படத்தை இயக்கி இருந்தனர் . இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரட்டேலா கதாநாயகியாக நடிக்க மயில்சாமி, பிரபு, கோவை சரளா, நாசர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மறைந்த நடிகர் விவேக்-ம் இந்தப் படத்தில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 

1

சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியானது.

அறிவியல் சார்ந்து உருவான இந்த படத்தில் விஞ்ஞானியாக அருள் சரவணன் நடித்திருந்தார்.  எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் கடந்த ஜூலை 28-ஆம் தேதி வெளியானது. 

இந்நிலையில் இப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகும் என அருள் சரவணன் அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில் நீங்கள் அனைவரும் காணும் வகையில் 'தி லெஜண்ட்' விரைவில் என்று கூறியுள்ளார். 


 

From Around the web