திரையுலகினர் அதிர்ச்சி!!கன்னட நடிகர் கத்தியால் குத்திக் கொலை!! 

 
1

'லகோரி' என்ற கன்னட படத்தில் ஹீரோவாக நடித்துள்ளவர். கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் உள்ள மத்தூரை சேர்ந்த சதீஷ் வஜ்ரா (36).
மேலும் பல்வேறு கன்னட படங்களில் துணை நடிகராகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில், சதீஷ் தனது குடும்பத்தினருடன் பெங்களூருவில் பட்டனகெரே பகுதியில் வசித்து வந்த நிலையில், நேற்றிரவு சதீஷின் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் சதீஷிடம் தகராறு செய்து, அவரை பிடித்து சரமாரியாக தாக்கி, கத்தியால் சரமாரியாக குதியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சதீஷ் உயிருக்கு போராடினார்.

satish

இதையடுத்து அவரை குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக விக்டோரியா அரசு மருத்துவமனையில் சதீஷ் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.ஆர்.நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில் கொலையான நடிகர் சதீஷ் ஒரு இளம்பெண்ணை காதலித்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அதன்பின் குடும்பத் தகராறு காரணமாக சதீஷின் மனைவி பாமீதா கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் சதீஷை அவரது மனைவியின் சகோதரர் கொலை செய்து இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.

victims

இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.ஆர்.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாமீதாவின் சகோதரர்களான சுதர்சன் மற்றும் நாகேந்திரன் ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From Around the web