ஒரு கிடாயின் கருணை மனு படத்தின் இசையமைப்பாளர் திடீர் மரணம்..!!

சென்னை, வட பழனியை சேர்ந்தவர் இசையமைப்பாளர் ரகுராம். 2017ல் சுரேஷ் சங்கைய்யா இயக்கத்தில் விதார்த் நடித்த, ‛ஒரு கிடாயின் கருணை மனு' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து ஓரிரு படங்களுக்கு இசையமைத்தார். ஆல்பம் போன்ற பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.
சமீபத்தில் மஞ்சள் காமாலை ஏற்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இதேபோல் காலில் இருந்த ஒரு பிரச்சனையால் நடக்க முடியாமல் அவதிப்பட்டதாகவும் தெரிகிறது.இந்த நிலையில் தான் உடல்நல குறைவால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் ரகுராம்.
இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய நண்பர்களும், இயக்குனர்களும், இசையமைப்பாளர்களும், பாடலாசிரியர்களும் ஏனைய திரையுலகினரும் அவருடைய மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.