யுவன் பிறந்தநாளுக்கு வித்தியாசமாக வாழ்த்து கூறிய இசைஞானி இளையராஜா..!!

 
1

இசைஞானி இளையராஜா தனது மகன் யுவன்சங்கர் ராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது: ’ஆழியாறு அணை அருகே உள்ள கெஸ்ட் ஹவுஸில் தங்கி சில திரைப்படங்களுக்கு மியூசிக் கம்போசிங் செய்வேன்.. அந்த வகையில் இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ’ஜானி’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘சொனோரீட்டா ஐ லவ் யூ’ என்ற பாடலை கம்போஸ் செய்து கொண்டிருந்தபோது தான் தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி வந்து எனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக கூறினார்

அந்த குழந்தை தான் யுவன் சங்கர் ராஜா என்றும் இசைஞானி இளையராஜா தனது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டு யுவனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.


 

From Around the web