விரைவில் ஒடிடியில் வெளியாகிறது 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'..!! எப்போ தெரியுமா ?

 
1

தமிழ் சினிமாவில் நகைச்சுவை அரசனாக இருந்து வருபவர் நடிகர் வடிவேலு. தனது நகைச்சுவையால் ரசிகர்களை கவர்ந்த வடிவேலு, இம்மை அரசன் 24-ஆம் புலிகேசி பட விவகாரத்தில் இயக்குனர் ஷங்கருடன் ஏற்பட்ட பிரச்சனையால் கடந்த சில ஆண்டுகளாக நடிக்காமல் இருந்து வந்தார்.சில ஆண்டுகள் கழித்து வடிவேலு நடிப்பில் வெளியான படம்  ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’.  இந்த படத்தை லைக்கா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார்.

1

இந்த படத்தில் வடிவேலுவுடன் இணைந்து மிகப்பெரிய காமெடி பட்டாளமே நடித்திருக்கிறது. கடந்த மாதம் 9ஆம் தேதி திரையரங்கில் வெளியான இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி, ஆனந்தராஜ், விக்னேஷ் காந்த், ரெடின் கிங்ஸ்லி என பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிதகவல் வெளியாகியுள்ளது. அதாவது படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் நாளை 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

From Around the web