எஸ்.கே படத்தில் நக்கல் மன்னன் கவுண்டமணி: இது வேற லெவல் காம்போ..!!

 
1

சினிமாவில் நக்கல் நையாண்டி, கதாநாயகனையே கலாய்ப்பவர்கள் என திரையுலகில் எம்.ஆர்.ராதாவை சொல்வார்கள். அவர் வழியில் பல சீர்த்திருத்த கருத்துகளை திரையில் சொன்னவர் கவுண்டமணி. இவரது வெளிப்படையான அதிரடி பேச்சு சினிமாவில் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. இன்றளவும் மற்றவர்களை கலாய்ப்பது என்றால் கவுண்டமணி காமெடிதான் சொல்லப்படும்.

1

சரத்குமார் கதாநாயகனாக அறிமுகமான சூரியன் படத்தில் லோக்கல் அரசியல்வாதியாக வந்து நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா? அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா, ஸ்டார்ட் மியூசிக் போன்ற வசனங்களால் பிரபலமானார்.

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான டான் படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து தற்போது தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் 'ப்ரின்ஸ்' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வீடியோ சமீபத்தில் வெளியாகியது.'மண்டேலா' பட இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கும் இப்படத்திற்கு 'மாவீரன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அருண் விஸ்வா தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் இயக்குநர் மிஷ்கின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

1

இந்நிலையில் மாவீரன் படத்தில் நடிகர் கவுண்டமணி நடிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. இந்தப் படத்தில் கவுண்டமணி சிவகார்த்திகேயனின் பெரியப்பாவாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

From Around the web