இன்று மாலை தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு..!!

 
1

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. நாட்டில் பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படங்களில் சிறந்த படங்களை தேர்வு செய்து விருதுகள் வழங்கப்படுகிறது. சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர், நடிகைகள் உள்பட பல்வேறு கலைகளில் சிறப்பாக திரைப்படங்களுக்கு பங்காற்றிய கலைஞர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படும்.

NFA

அதன்படி, 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கு 68வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளது. இந்த விருதுகள் இன்று மாலை 4 மணிக்கு டெல்லியில் அறிவிக்கப்பட உள்ளது. இதனால், இந்த ஆண்டு தமிழகத்திலிருந்து எந்தெந்த படங்கள் மற்றும் படத்தில் நடித்தவர்கள் என யார் யாருக்கு விருதுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி ஆஸ்கார் வரை சென்ற சூரரை போற்று மற்றும் ஜெய் பீம் படங்களுக்கு விருதுகள் கிடைக்கலாம் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

NFA

கடந்தாண்டு நடைபெற்ற 67-வது தேசிய திரைப்பட விருதுகளில், அசுரன் திரைப்படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இயக்குநர் வெற்றிமாறன் பெற்று கொண்டார். படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் தனுஷ்க்கு விருது வழங்கப்பட்டது.தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.

அத்தோடு தாதா சாகேப் பால்கே விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

From Around the web