சாதனை படைத்த ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல்..!!

 
1

ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஆர்ஆர்ஆர்’. இந்தப் படம் சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருந்தது. இந்திய அளவில் பிரபல நட்சத்திரங்களான ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்த இந்தப் படம் கடந்த ஆண்டு மார்ச் 25-ம் மாதம் வெளியாகி வசூல் சாதனை படைத்தது.

இந்த நிலையில், ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் கோல்டன் குளோப் விருது நாமினேஷன் பட்டியலில் இரண்டுப் பிரிவுகளில் இடம்பிடித்தது. திரைத்துறையினர் உயரிய விருதாக கருதும், ஆஸ்கர் விருதுக்கு அடுத்தப்படியாக கோல்டன் குளோப் விருது விளங்கி வருகிறது.

RRR

இந்த நிலையில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது. ஒரிஜினல் பாடல் பிரிவில் எம்.எம்.கீரவாணி இசையமைத்த ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு விருது கிடைத்துள்ளது.

மேலும் ஆஸ்கார் விருது நாமினேஷனிலும் ‘நாட்டு நாட்டு’ பாடல் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடைபெற்ற விழாவில் இயக்குனர் ராஜமௌலி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு விருதினை பெற்றனர்.


 



இதற்கு முன்பாக, லாஸ் ஏஞ்சல்ஸின் சீன திரையரங்கில் ஆர்ஆர்ஆர் திரையிடப்படுகிறது. அங்கு 98 வினாடிகளில் மொத்த டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன. இதனை பியாண்ட் ஃபெஸ்ட் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. மேலும் இந்த ஆண்டு பாஃப்டா விருதுப் போட்டிக்கான முதற்கட்ட பரிந்துரைப் பட்டியலில், சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான பிரிவில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் இடம்பெற்றுள்ளது. திரைத்துறையில் ஆஸ்கர் விருதுக்கு இணையாக பாஃப்டா விருதுகள் கருதப்படுகின்றன. இந்த விருது சிறந்த நடிகர், நடிகை, வெளிநாட்டுப் படம் என மொத்தம் 25 பிரிவுகளில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில் 10 படங்கள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாகவும், இறுதிப் போட்டிக்கு 5 படங்கள் தேர்வுசெய்யப்படும் எனவும் கூறப்படுகின்றன.

From Around the web