கவலையில் நயன் - விக்கி ஜோடி..!! வாடகை தாய் மூலம் பெற்ற குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை!!

 
1

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் நயன்தாரா அவரது நீண்ட நாள் காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த மாதம் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். சென்னை அருகே மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்த இத்திருமணத்தில்  வரவேற்பு அழைப்பிதழ் வைத்திருந்த பிரபலங்கள் மட்டும் கலந்துகொண்டனர்.

Nayanthara

திருமணத்தை முடித்த கையோடு இருவரும் ஹனிமூன் சென்றுவிட்டு மீண்டும் தங்களது பணிகளில் மூழ்கியுள்ளனர். இந்நிலையில் விக்னேஷ் சிவன் செய்திருக்கும் ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

அதில், அதில் தானும் நயன்தாராவும் அப்பா அம்மா ஆகிவிட்டோம். எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இரு குழந்தைகளும் ஆண் குழந்தைகள் என தெரிவித்துள்ளார். இந்த இன்ஸ்டா போஸ்ட்டை பார்த்த பலருக்கு ஒரே குழப்பம், ஜூன் 9-ம் தேதிதானே இருவருக்கும் திருமணம் நடந்தது, அதற்குள் எப்படி குழந்தை பிறப்பு என குழம்பிவிட்டனர்.

Nayanthara

இந்த நிலையில்தான் அவர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றிருப்பது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி உள்ளது. நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு சிலர் வாழ்த்து கூறிவந்தாலும், பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இவரது குழந்தைகள் குறைமாதத்தில் பிறந்த குழந்தை என தகவல் வெளியாகி உள்ளது. குழந்தைகள் இரண்டும் குறைமாதத்தில் பிறந்ததால் மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் நயன்தாரா ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From Around the web