திருமணம் முடிந்த கையுடன் ஜோடியாக திருப்பதி சென்ற நயன் -விக்கி…
Fri, 10 Jun 2022

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தன் 6 வருட காதலனான விக்னேஷ் சிவனை நேற்று கரம் பிடித்தார்.சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தாலி எடுத்துக் கொடுக்க விக்னேஷ் சிவன் நயன்தாரா கழுத்தில் தாலி கட்டினார்.திருமணம் முடிந்த சில மணிநேரங்களில் திருமணப் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.
திருமணத்தை திருப்பதியில் செய்ய முடிந்து சில காரணங்களால் அதை நடத்த முடியாமல் போன நிலையில், தற்போது திருமணம் முடிந்த கையோடு, திருப்பதிக்கு இந்த ஜோடி சென்று உள்ளனர் . கடந்த சில மாதங்களாகவே பல கோயில்களுக்கு இவர்கள் இருவரும் ஜோடியாக சென்றுவந்தது குறிப்பிடத்தக்கது.இதனிடையே நாளைய தினம் பத்திரிகை மற்றும் மீடியாவினருக்காக ரிஷப்சன் வைக்கப்பட உள்ளதாக முன்னதாகவே விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.