நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு திருப்பதியில் திருமணம் ?

 
1

நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், திருமண தேதியை முடிவு செய்து விட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது .

அஜித்குமார் நடிக்கும் 62-வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நாயகியாக நடிப்பார் என தெரிகிறது.இந்த படப்பிடிப்புக்கு முன்பு திருமணம் நடக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடியாக சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து, நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திருமண ஏற்பாடுகளை பார்வையிட்டனர் என தகவல் தெரிவித்தன.

இதனை தொடர்ந்து, நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9ம் தேதி திருப்பதியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 

From Around the web