500 கோடி ரூபாய் மதிப்பில் உருவாகும் மிக பிரம்மாண்ட படத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்..!!

 
1

'பாகுபலி' படத்திற்குப் பிறகு பிரபாஸ் புராண கதையில் உருவாகும் படத்தில் நடித்துள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.ஓம் ரவுத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படம் ராமாயணக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்தில் நடிக்க, பாலிவுட் நடிகை  க்ரித்தி சனோன் சீதையாக நடித்துள்ளார். மேலும் நடிகர் சன்னி சிங் லட்சுமணன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சைப் அலி கான் வில்லனாக ராவணன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

1

ஆதிபுருஷ் திரைப்படம் 3டி டெக்னாலஜியில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறது. இப்படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நேரடியாக எடுக்கப்படுகிறது. தமிழ், மலையாளம், கன்னடம் மற்ற இந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. 

சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.  இந்நிலையில் இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. இந்த டீசரில் இடம்பெற்றுள்ள கிராபிக்ஸ் காட்சிகள் வீடியோ கேம் போன்று இருப்பதாக தற்போது நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். 


 


  

From Around the web