நெட்ஃப்ளிக்ஸில் புதிய அறிவிப்பு..!! விரைவில் வெளியாகும் நயன் - விக்கி காதல் கதை ஆவணப்படம்!! 

 
1

நடிகை நயன்தாரா அவரது நீண்ட நாள் காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த மாதம் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். சென்னை அருகே மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் 200 விஜபிக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்த திருமணத்தை ஒளிபரப்பு செய்யும் உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவித்தன. அதனால் கல்யாணத்திற்கு மீடியாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டன. ஏற்கெனவே அறிவித்ததுப்படி திருமண போட்டோக்களை திருமணம் முடிந்து பிற்பகலுக்கு பிறகு சோஷியல் மீடியாவில் விக்னேஷ் சிவன் ஷேர் செய்து இருந்தார்.

Nayan-viki

அதே போல் விக்கி - நயனின் காதல் கதையை இயக்குனர் கெளதம் மேனன் ஆவணப்படமாக இயக்கியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, அந்த உரிமையை வாங்கிய நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் அதற்காக தாங்கள் அளித்த 25 கோடியைத் திருப்பித் தருமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. 

ஓடிடி தளத்திற்கு தங்களது திருமணம் பற்றிய நிகழ்வை நிகழ்ச்சியாக்கி பெரிய தொகைக்கு நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் விற்றுவிட்டதாக செய்திகள் வெளிவந்தது. அதற்கேற்றபடி திருமணம் நடந்து முடிந்ததும் ஒரு சில புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டனர். வந்து வாழ்த்திய பிரபலங்களின் புகைப்படங்கள் சிலவற்றை ஒரு மாதத்திற்குப் பிறகு மட்டுமே வெளியிட்டார்கள்.

Nayan-viki

அவர்களது திருமணம் ஓடிடியில் வரும் என்று சொல்லப்பட்டது போல இதுவரை வரவில்லை. இதனிடையே, அந்த உரிமையை வாங்கிய நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் அதற்காக தாங்கள் அளித்த 25 கோடியைத் திருப்பித் தருமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. 

இந்நிலையில் இந்த ஆவணப்படம் கூடிய விரைவில் நெட் ஃப்ளிக்ஸ் தளத்தில் ஒளிப்பரப்பாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதல் கதை என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தை விரைவில் நெட் ஃப்ளிக்ஸில் ஒளிப்பரப்ப ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம். கூடிய விரைவில் ரசிகர்கள் இதை கண்டுக்களிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nayan-viki

அதே நேரம், நயன்தாரா - விக்னேஷ் சிவனின் காதல் கதை குறித்த ஆவணப்படத்தை வெளியிட நெட்ஃப்ளிக்ஸ் தீவிரம் காட்டி வருவதை பார்க்கும் போது இதுப்போன்ற சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கே என்பதை காட்டுகிறது.


 

From Around the web