லேடி சூப்பர்ஸ்டார் படத்திற்கு புதிய சிக்கல்..? வெளியாகுமா கனெக்ட் திரைப்படம்..!! 

 
1

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதம் 9ந-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. சமீபத்தில் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயாகி இருக்கும் நயன்தாரா தொடர்ந்து தனது திரைப்பயணத்திலும் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும், இயக்குநர் அட்லீ ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார் இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியான நடிக்கும் நயன்தாரா இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் எண்ட்ரி கொடுக்க இருக்கிறார். இத்திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது.

connect-movie

இதனிடையே மாயா படத்தின் இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் ‘கனெக்ட்’. இப்படத்தில், நயன்தாராவுடன் சத்யராஜ், அனுப்பம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபீஸா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டீசர் நயன்தாராவின் பிறந்த நாள் வெளியானது. இந்த டீசரில், நயன்தாராவுடன் இருக்கும் குழந்தைக்கு பேய் பிடித்துள்ளது போல கதையமைக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் அனுபம் கேர் வீடியோ கால் மூலம் பேய் ஓட்டுபவராக வருகிறார். இப்படம், 99 நிமிட நீளத்திற்கு உருவாக்கப்பட்டுள்ளது.

Nayanthara

இந்நிலையில், கனெக்ட் திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டியையொட்டி வரும் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 99 நிமிடங்கள் ஓடும் இந்த படத்திற்கு இடைவேளை இல்லை என இயக்குனர் அஷ்வின் தெரிவித்திருந்த நிலையில், திரையரங்கு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இடைவெளை இல்லாமல் படத்தை வெளியிட முடியாது என்று திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்திருந்த நிலையில், படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

From Around the web