‘இரவின் நிழல்’படத்திலிருந்து வெளியான புதிய ப்ரோமோ..!!

 
1

அகிரா புரொடக்ஷன்ஸ் மற்றும் பயாஸ்கோப் ஃபிலிம் ஃபிரேமர்ஸ் பேனரின் கீழ் ஆர் பார்த்திபன் இயக்கி, தயாரித்து, எழுதி, இணைந்து எடிட்டிங் செய்திருக்கும் இந்த சிங்கிள் ஷாட் திரில்லர் திரைப்படம் இரவின் நிழல். இந்த படம் உலகின் முதல் சிங்கிள்-ஷாட் நான்-லீனியர் திரைப்படம் என்று கூறப்படுகிறது, மேலும் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்தது.

மேலும் இந்த படம் ஜூலை 15 ஆம் தேதி திரையரங்கில் ரிலீசாக உள்ளது .

இயக்குனர் பார்த்திபனுடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார், ப்ரிகிடா, ரோபோ ஷங்கர் ,பிரியங்கா மற்றும் கிருஷ்ணா உள்ளிட்டோர் இரவின் நிழல் திரைப்படத்தில் நடித்துள்ளனர். பயாஸ்கோப் பிலிம் ஃபிரேமர்ஸ் தயாரித்துள்ள இரவின் நிழல் திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் வெளியிடுகிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இரவின் நிழல் திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இரவின் நிழல் திரைப்படத்திலிருந்து புதிய ப்ரோமோ வீடியோ தற்போது வெளியானது. 

From Around the web