'புஷ்பா 2' குறித்து புதிய அப்டேட் !அல்லு அர்ஜூனுக்கு வில்லியாகும் பிரபல நடிகை.. 

 
1

தெலுங்கு நடிகர் அர்ஜூன் மற்றும் முன்னணி இயக்குனர் சுகுமார் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'புஷ்பா'. செம்மர கடத்தலை மையமாக வைத்து உருவான இந்த  திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகனாக அல்லு அர்ஜூனும், வில்லனாக பகத் பாசிலும் நடித்திருந்தனர். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.

1

வசூலை வாரி குவித்த இந்த படத்தின் பாடல்களும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.   இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கான பணிகள் தொடங்கின. அதன்படி முதல் பாகத்தில் அல்லு அர்ஜூன் மற்றும் பகத் பாசில் மோதல் காட்சிகள் அதிகமாக இருந்தது. இதையடுத்து அடுத்த பாகத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய வில்லனாக நடிக்கிறார். இந்நிலையில் விஜய் சேதுபதியின் மனைவி கதாபாத்திரத்தில் மிரட்டும் வில்லி கதாபாத்திரத்தில் நடிகை பிரியாமணி நடிக்கிறார். 

From Around the web