நியூஸ் ரீடர் டூ சீரியல் நடிகை – பாக்கியலக்ஷ்மி ரேஷ்மா..!! 

 
1

வாழ்க்கையில் திறமைசாலியாகவும் பல தடைகளையும் உடைத்து இணைக்கு நம்ப எல்லாருக்கும் பிடிச்ச ரொம்ப அசத்தலான நடிகை பாக்கியலட்சுமி புகழ் ரேஷ்மாவின் சக்ஸஸ் ஸ்டோரியத்தான் பார்க்கப் போறோம்.

அமெரிக்காவுல என்ஜினீயரிங் படிச்சவங்க இப்போ நம்ப சின்னத்திரையில் மோஸ்ட் வான்டட் சீரியல் நடிகை. இதெல்லாம் எப்படி நடந்துச்சுன்னு தெரியுமா.

ரேஷ்மாவோட அப்பா தெலுங்கு திரையுலக தயாரிப்பாளர். அப்போ இருந்தே அப்பா கூட ஷூட்டிங் போறது, அவர் தயாரிக்கும் படங்களில் குழந்தை நட்சத்திரமா நடிக்கிறதுனு தொடங்கிய பயணம்தான் இது. ஆனால், அதன் பிறகு அவங்க ஸ்கூல், காலேஜ் வாழ்க்கை எல்லாம் அமெரிக்காவுல தான். செயிண்ட் ஜோசப் பல்கலைக்கழகத்துக சாப்ட்வேர் என்ஜினீயரிங் முடிச்சவங்க தான் நம்ம ரேஷ்மா. விமானத்திலும் ஏர் ஹோஸ்டஸாகவும் வேலை பார்த்து இருக்காங்க.

அவங்க அப்படி வேலை பார்த்துட்டு இருந்த சமயத்துல இந்தியா வந்த அப்போ, ஒரு ஷாப்பிங் மால்-ல நண்பர்களோடு வெளிய போய் இருக்காங்க. அப்படி அவங்க போன அப்போ தான் அந்த மேஜிக் மொமென்ட் அவங்க வாழ்க்கையில வந்து இருக்கு. டிவி சேனலுக்கு ஒரு பைட் கொடுக்கணும் அவங்க நண்பர்கள் பேச தயங்குனதால் இவங்க பைட் கொடுத்து இருக்காங்க. சொல்லவா வேணும் அமெரிக்காவுல படிச்சவங்க இங்கிலீஷ்ல பேசி அசத்தி இருக்காங்க. சில தினங்கள் கழித்து அவங்க பேசின அந்த புரோகிராம்-க்கு நல்ல டி.ஆர்.ச்பி வரவே அந்த சேனலோட தலைமையில் இருந்து ரேஷ்மா-க்கு கால் பண்ணி சேனல்ல நியூஸ் ரீடரா வேலை செய்ய சான்ஸ் கொடுத்து இருக்காங்க. சரி வந்த வாய்ப்பை தவறவிடக் கூடாதுன்னு இங்கிலீஷ் நியூஸ் ரீடராக வேலை பார்த்துட்டு இருந்தாங்க.

அப்படியே சில சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைக்குது. ஜெமினி டிவியில் ஷோ பண்ணி இருக்காங்க. 

தெலுங்கு சீரியல்களில் நடிச்சு இருக்காங்க. அப்படி இவங்க தெலுங்கு ஷோஸ் பண்ணிட்டு இருந்த அப்போ உலக நாயகன் கமல் ஹாசனை இன்டெர்வியூ பண்ண வாய்ப்பு கிடைச்சு இருக்கு. ரேஷ்மாவுக்கு அப்போ தெலுங்கு அவ்வளவு சரளாமாக பேச வரலனாலும் 10 கேள்வியை எழுதி வெச்சு கேட்டு இருக்காங்க. கேள்விகள் தீர்ந்து போனதும் என்ன செய்றதுன்னு தெரியாம இங்கீலீஷ்ல பேசி இருக்காங்க கமல் சாரும் இவங்களுக்கு இங்கிலீஷ் தான் நல்ல பேச வருதுன்னு சொல்லி அவரும் இங்கிலீஷ்ல பேசி மாஸ் பண்ணி இருக்காரு. என்னால மறக்கவே முடியாது மொமெண்ட் அது-ன்னு ரேஷ்மாவும் சொல்லி இருக்காங்க. 

இப்படியே போயிட்டு இருந்த நேரத்துல தமிழ் சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வருது. வாணி ராணி சீரியல் மூலமாக தமிழ் -க்கு என்ட்ரி கொடுக்கிறாங்க.  வம்சம் சீரியலிலும் நடிச்சு இருக்காங்க. தேவிகா அப்படிங்குற வில்லி கேரக்டர்ல அறிமுகமாகி சீரியல் வில்லி கேரக்டர் தான் பண்ணிட்டு இருந்தாங்க. வேந்தர் டிவி-யில முதல் முறையா சக்தி அப்படிங்குற கேரக்டர்ல சுந்தரகாண்டம் சீரியலில் ஹீரோயினா அறிமுகம் ஆகுறாங்க.  

Reshma

நடிகர் பாபி சிம்ஹா இவரோட உறவுக்காரர் அப்படிங்குறாதால மசாலா படத்தில் நடிக்க சான்ஸ் வருது. படத்தில் 2-வது ஹீரோயினா நடிக்குறாங்க. அதன் பிறகு அப்படியே கோ-2, போன்ற படங்களில் நடிச்சு இருக்காங்க. இதுல வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் சூரி-க்கு ஜோடியா புஷ்பா அப்படிங்குற கேரக்டர்ல நடிச்சு  தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஃபேமஸானாங்க. 

இதுக்கு இடையில கிடைச்ச கேப்-ல நர்சிங் கோர்ஸ் கூட பண்ணி இருக்காங்க. இப்படி நிறைய வேலைகள் பண்றிங்கனு அவங்க கிட்ட கேட்ட அப்போ, எது செஞ்சாலும் 200% அந்த வேலைக்கான உழைப்பை போட்டு பண்ணுவேன், என்னோட பெஸ்ட் கொடுப்பேன்னு சொல்லி சொல்றாங்க.

சன் டிவியில் அன்பே வா சீரியல் மூலமாகவும் பல இல்லத்தராசிகளை கவர்ந்து இருக்காங்க. இப்போ விஜய் டிவி-யில ஒளிபரப்பாகும் பாக்கிய லட்சுமி சீரியலில் ராதிகா கேரக்டர்ல நடிச்சிட்டு இருக்காங்க.

From Around the web