இந்த முறை ஷிவானி கோமாளி இல்லை.. ப்ரோமோஷன் கொடுத்த விஜய் டிவி..!!  

 
1

பிக்பாஸ் நிறைவுபெற்றுள்ளதால் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி களைக்கட்ட தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் ஜனவரி 28-ஆம் தேதி கோலாகலமாக துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ப்ரோமோக்களும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. 

இந்த நிகழ்ச்சியில் வழக்கம் போல் நடுவர்களாக தாமு மற்றும் வெங்கடேஷ் பட் உள்ளனர். வழக்கம் போல் விஜே ரக்ஷன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். இந்த சீசனில் ஓட்டேரி சிவா, ஜிபி முத்து, சிவாங்கி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதனால் நிகழ்ச்சியை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். 

இந்நிலையில் வழக்கம் சிவாங்கி கோமாளியாக கலக்கி வருகிறார். ஆனால் இந்த சீசனில் அதற்கு மாறான குக்காக கலக்கவுள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவின. இது குறித்து விளக்கம் அளித்துள்ள சிவாங்கி, வெளியான வதந்திகள் அனைத்தும் உண்மை தான் என்றும், தான் குக்காக இந்த சீசனில் ப்ரமோட்டாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். எனது புதிய பயணத்திற்கு உங்களின் ஆதரவு தேவை என்று கூறியுள்ளார். 


இந்த நிலையில் யாரெல்லாம் குக்குகளாக கலமிறங்க இருக்கின்றனர் என்ற சூப்பர் தகவல்  வெளியாகியுள்ளது.அதன்படி ஸ்ருஷ்டி டாங்கே, Andreanne Nouyrigat என்ற வெளிநாட்டு நடிகை, ஷெரின், ராஜ் ஐயப்பா, VJ விஷால், காளையன், விசித்ரா, கிஷோர் ராஜ்குமார் மற்றும்  சிவாங்கி இந்த முறை புரொமோட்டாகி குக்காக மாறியிருக்கிறார்.குக்குகளை தொடர்ந்து கோமாளியாக இந்த முறை டிக்டாக் புகழ் ஜிபி முத்து களமிறங்க இருக்கிறார். அதனால இந்த சீசனிற்கான எதிர்பார்ப்பு வழக்கத்தை விட கூடுதலாக உள்ளது. 

From Around the web