யாரா இருந்தாலும் காசு கொடுத்தா தான் தீனி..!! சிம்பு கேங்ஸ்டராக மிரட்டும் ‘வெந்து தணிந்தது காடு’ டிரெய்லர் ! 

 
1

சிம்பு தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து முடித்துள்ளார். விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களை அடுத்து இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இந்தப் படத்தில் நடிகை சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்துள்ளார்.இவர்களுடன் ராதிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷ்னல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஐசரி கணேஷ் சார்பாக வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

1

இரு பாகங்களாக உருவாகி வரும் இப்படம் கேங்ஸ்டர் கதைக்களத்தில் தயாராகி வருகிறது. இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் நடிகர்கள் கமல், சிம்பு, இயக்குனர் கெளதம் மேனன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.  இதில் இடம்பெற்றுள்ள வசனங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த படம் சிம்பு ரசிகர்களுக்கு தீனி போடும் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.  


 

From Around the web