ஒரு பொண்ணு இதுவரைக்கும் யாருமே பார்த்திருக்க மாட்டாங்க...அப்படி இருக்கனும்... வெளியான ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..!!   

 
1

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர் கடைசியாக சுழல் வெப் சீரிஸில் நடித்திருந்தார். அந்த வெப் சீரிஸ் நல்ல வரவேற்பைப் பெற்றது.அதையடுத்து வத்திக்குச்சி’ படத்தை இயக்கிய கிங்ஸ்லின் இயக்கத்தில் டிரைவர் ஜமுனா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இதனுடன் பிரத்தியேக காணொளி ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.இப்படத்திற்கு 'சொப்பன சுந்தரி' எனப் பெயரிட்டுள்ளனர்.

1

'லாக்கப்' படத்தை இயக்கிய இயக்குநர் எஸ். ஜி. சார்லஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தில் கதையின் நாயகியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். இவருடன் தேசிய விருது பெற்ற லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி, அகஸ்டின், பிஜான், தென்றல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

இந்த திரைப்படத்திற்கு அஜ்மல் மற்றும் சிவாத்மிகா இசையமைத்துள்ளனர். டார்க் காமெடி ஜானரில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும் ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

இதன் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்ததை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. படத்திற்கு 'சொப்பன சுந்தரி' எனப் பெயரிடப்பட்டிருப்பதால் அனைவரையும் கவர்ந்திருக்கிறது.

From Around the web