இனி இதுதான் ட்ரெண்ட் செட்டர்..!! விஜய் டிவி வெளியிட்ட புது சேனல்..!!

 
1

“இனி இதுதான் ட்ரெண்ட் செட்டர்” என்ற வாசகத்தோடு ஸ்டார் விஜய் தமிழில் இளைஞர்களுக்கான பொழுதுபோக்கு சேனலை புதிதாக தொடங்க உள்ளது . இந்த சேனல் பெயர் ‘விஜய் டக்கர் ’. இந்த சேனல்  2 k குழந்தைகளை குறிவைக்கும் வகையில் உருவாகி உள்ளது .

ஸ்டார் விஜய் சேனலை போலவே இந்த விஜய் டக்கர் சேனலிலும் கவனத்தை ஈர்க்கும் பல நிகழ்ச்சிகள் உள்ளன.

  • “காலேஜ் டா” – இந்தக்கால 2K கிட்ஸ்-களின் அட்ராசிட்டியான கல்லூரி கேம்பஸ்ஸை மையப்படுத்தியது
  • “சினிமா காரம் காபி” – புதிய பரிமாணத்தில் விஜய் டிவியில் சூப்பர் ஹிட் நிகழ்ச்சி
  • அட்டகாசமான கேம் ஷோவாக “ட்ரக் மேல லக்கு” ,
  • மேக்கப் மற்றும் ஃபேஷனை மையப்படுத்தி “ஸ்டைலு ஸ்டைலுதான்” ,
  • பிரபல நட்சத்திரங்களை அவர்களது வீடு, குடும்பம், நண்பர்களோடு சந்திக்கும் “ஸ்டாருடன் ஒரு நாள்” ,
  • புதிய டேட்டிங் ஷோவாக வரும் “சம்திங் சம்திங்” என விஜய் டக்கர் தொலைகாட்சியின் ஆறு அதிரிபுதிரியான நிகழ்ச்சிகளை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

தொடர்ந்து இளைஞர்களை கவரும் புதுப்புது நிகழ்ச்சிகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

From Around the web